யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும் இந்த பழமொழிக்கு இன்றைய கருத்து.
யானை போன்று பலம் பொருந்தியவர்கள் ஒரு சில காலகட்டங்களில் வெற்றி பெற்றால் பூனையைப் போன்ற பலம் குறைந்தவர்களும் தகுந்த நேரம் வரும்போது வெற்றி பெறுவார்கள் என்பதாகும்.
ஆனால் இந்த பழமொழி உருமாறி இருக்கிறது. “ஆ நெய்க்கு ஒரு காலம் வந்தால் பூ நெய்க்கும் ஒரு காலம் வரும் என்பதாகும்".
அதாவது ஆ என்றால் ஆவினம். ஆவினம் என்றால் பசுக்கூட்டம் என்று பொருள். பசுவின் பாலில் இருந்து கிடைக்கக் கூடிய நெய்யை இளமைக்காலத்தில் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பொலிவு ஏற்படும்.
பூநெய் என்றால் பூவினால் கிடைக்கும் தேன். இந்த தேனை முதுமைக்காலத்தில் உட்கொண்டால் உடலுக்கு வலு சேர்க்கும்.
இதை உணர்த்தவே இந்த பழமொழி. எனவே இந்த பழமொழியில் யானைக்கும், பூனைக்கும் சம்பந்தமில்லை.