அஜீத் பிறந்தநாளுக்கு இன்னும் இரண்டு வாரங்களே இருக்கும் நிலையில், பல்வேறு கொண்டாட்டங்களுக்கு பிளான் போட்டு வைத்திருக்கின்றனர் அவருடைய ரசிகர்கள். அவர்களைக் குஷிப்படுத்துவதற்காக ஒரு திட்டத்தை வைத்திருக்கின்றனர் கோயம்பேடு ரோகிணி தியேட்டர் நிர்வாகத்தினர்.
அன்று காலை, அங்குள்ள நான்கு ஸ்கிரீன்களிலும் நான்கு அஜீத் படங்கள் திரையிடப்பட இருக்கின்றன. ஆனால், அந்தப் படங்கள் எவையெவை என தியேட்டர் நிர்வாகம் அறிவிக்கவில்லை. ‘பிளைண்ட் டேட்’ போல, எந்தப் படம் ரிலீஸாகும் என சஸ்பென்ஸுடன் தியேட்டருக்குப் போக வேண்டியதுதான். அஜீத் ரசிகர்களுக்கு எந்தப் படமாக இருந்தால் என்ன? அவரின் எல்லாப் படங்களுமே அவர்களுக்கு கொண்டாட்டம்தானே…