நயன்தாரா நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘டோரா’ படம் ‘ஆஹா… ஓஹோ…’ டைப் இல்லையென்றாலும், ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது. தொடர்ந்து ‘அறம்’ படத்தில் கலெக்டராக நடித்துள்ள நயன், ‘இமைக்கா நொடிகள்’ படத்தையும் முடித்துவிட்டார்.
தற்போது ‘வேலைக்காரன்’, ‘கொலையுதிர் காலம்’ படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பவர், அடுத்தடுத்து சில கதைகளைக் கேட்டு ஓகே செய்து வைத்திருக்கிறார். அதில், நந்தா பெரியசாமியும் ஒருவர். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள இந்தக் கதையில், ஓட்டப் பந்தய வீராங்கனையாக நடிக்கிறார் நயன்.
விளையாட்டுத் துறையில் பெண்களுக்கு நடக்கும் பாலியல் வன்முறைகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் இந்தப் படத்திற்காக, நிஜ கோச் ஒருவரிடம் பயிற்சி பெற முடிவெடுத்துள்ளாராம் நயன்தாரா.