கிழவியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் பொதுவாக, தமிழ் சினிமா நடிகைகள் என்றாலே கேரளாவில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுவார்கள்.
ஆனால், இங்கிருந்து மலையாளத்துக்குச் சென்று வெற்றிக்கொடி நாட்டியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். துல்கர் சல்மான் ஜோடியாக அவர் நடித்த ‘ஜோமோண்டே சுவிசேஷங்கள்’ படம், கடந்த ஜனவரி மாதம் ரிலீஸானது. இந்தப் படத்தில், நடிப்புக்குத் தீனி போடும் வகையில் ஐஸ்வர்யா ராஜேஷின் கேரக்டர் இருந்தது. அவரும் அதை சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டார்.
இந்நிலையில், நிவின் பாலி ஜோடியாக நடித்திருக்கும் ‘சகாவு’ படம் ரிலீஸுக்குத் தயாராகி விட்டது. இந்தப் படத்தில் இரண்டுவிதமான கெட்டப்களில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். அதில் ஒன்று, 65 வயதான கிழவி வேடம்.