முதல் படம் ரிலீஸாவதற்கு முன்பே, அகில இந்திய அளவில் ரசிகர் மன்றம் தொடங்கி, போஸ்டர் அடித்து ஊரெல்லாம் ஒட்டிக்கொள்ளும் பழக்கம் தமிழ் சினிமா ஹீரோக்களுக்கு. ஆனால், ஹீரோயின்களுக்கு ரசிகர் மன்றம் என்பது பெயரளவுக்குத்தான். நான்கைந்து வருடங்கள் கூட ஃபீல்டில் இருக்க மாட்டார்கள் என்பது கூட காரணமாக இருக்கலாம்.
ஆனால், 13 வருடங்களாக ஹீரோயினாக தாக்குப்பிடித்து, ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று போற்றப்படும் அளவிற்கு உயர்ந்திருக்கிறார் நயன்தாரா.
அவருடைய பிளானைப் பார்த்தால், இன்னும் நான்கைந்து வருடங்களுக்கு அவரை யாரும் அசைக்க கூட முடியாது போல. இருந்தாலும், இன்னும் இன்னும் உயரப் போக வேண்டுமென ஆசைப்படுகிறார் நயனின் காதலர் விக்னேஷ் சிவன்.
சும்மாவே இந்தப் புகழ் எனும்போது, இன்னும் கொஞ்சம் பில்டப் கொடுத்தால்… ரசிகர் மன்றம் மூலம் நயனுக்கு பில்டப் கொடுக்க நினைக்கும் விக்னேஷ் சிவன், அதற்கான வேலைகளை ஆரம்பித்துவிட்டதாக கூறப்படுகிறது.