கமலின் அண்ணன் சந்திரஹாசன், அண்மையில் லண்டனில் காலமானார். அவருக்கு, சென்னை காமராஜர் அரங்கில் இன்று காலை இரங்கல் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ரஜினி, “கமலுக்கு மொத்தம் 3 தந்தைகள். அவரைப் பெற்ற சீனிவாசன், வளர்த்த சாருஹாசன், ஆளாக்கிய சந்திரஹாசன். எனக்குத் தெரிந்து பொருளாதாரம் எதையும் கமல் சேர்த்து வைக்கவில்லை. அப்படி அவர் சேர்த்து வைத்திருந்தால், அதற்கு ஒரே காரணம் சந்திரஹாசன் தான்.
அவர் இல்லாமல் கமல் இனி எப்படி சம்பாதிக்கப் போகிறார் என்று தெரியவில்லை. இரண்டு முறை மட்டுமே அவரைச் சந்தித்திருந்தாலும், அவரைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். கமல், கடும் கோபக்காரர். அதனால், அவரிடம் ஜாக்கிரதையாக இருப்பேன்’ என்று பேசினார்.