தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்றபிறகு, விஷால் அணியினர் ஒருசில அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் அனைவருக்கும் ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில், படம் முடிந்தும் வெளியிட முடியாத, தொலைக்காட்சி உரிமம் கிடைக்காத, மானியம் கிடைக்காத படங்களின் விவரங்களைத் தெரியப்படுத்துமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விவரங்களை, வருகிற 21ஆம் தேதி மாலை 6 மணிக்குள் தெரியப்படுத்த வேண்டுமாம். அதன்பிறகு சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்தாலோசித்து, நடவடிக்கை எடுப்பார்களாம். ஓப்பனிங்லாம் நல்லாத்தான் இருக்கு, பினிஷிங் எப்படி இருக்குன்னு பார்க்கலாம்…