சற்றுமுன்

கற்றாழையின் மருத்துவப் பயன்கள்


🌵 கோடைகாலத்தில் உருவாகக் கூடிய நீர்கடுப்பு, நீர்தாரை எரிச்சல், உடல் வெப்பம், உடல் காந்தல் போன்ற பாதிப்புகளுக்கு சோற்றுக் கற்றாழையில் உள்ள சோறு போன்ற கலவையை எடுத்து சுத்தமான நீரில் அலசிக் கொள்ள வேண்டும். பிறகு அதற்குச் சமமான அளவில் பனங்கற்கண்டினை அதனுடன் சேர்த்து தினமும் இருவேளைகளிலும் உட்கொண்டு வந்தால் உடல் உஷ்ணமும், எரிச்சலும் குறையும்.
🌵 சோற்றுக் கற்றாழையில் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் அனைத்தும் உள்ளன. மேலும் இது உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.
🌵 தினமும், சோற்றுக் கற்றாழையின் சாற்றையோ அல்லது உள்ளிருக்கும் கூழ்ப்பகுதியையோ அளவோடு சாப்பிட்டு வந்தால் தௌpவான கண் பார்வையைப் பெறலாம்.
🌵 கண்களில் அடிபட்டதாலோ, இதர காரணங்களாலோ கண் சிவந்து வீங்கியிருந்தால் சோற்றுக் கற்றாழை வைத்துக் கட்டி இரவு தூங்கினால் வலி குறையும். மூன்று தினங்களில் நோய் குணமாகும்.
🌵 சோற்றுக் கற்றாழைச் சாறு 6 தேக்கரண்டி மற்றும் ஒரு சிட்டிகை அளவு பொரித்த பெருங்காயம் எடுத்து, இந்த இரண்டையும் தேவையான அளவு பனை வெல்லத்துடன் சேர்த்து நன்றாக இடித்து வைத்துக் கொள்ள வேண்டும். இதனை அரை கிராம் அளவிற்கு தினமும் இரண்டு வேளைகள், சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலி குறையும்.
🌵 சோற்றுக் கற்றாழை இலையின் சதைப் பகுதியைச் சேகரித்து, காயவைத்துப் பொடி செய்து கொள்ள வேண்டும். இதில் இரண்டு சிட்டிகை அளவு பொடியை, அதே அளவு மஞ்சள் பொடியுடன், கால் கப் தண்ணீரில் கலந்து பருக மலச்சிக்கல் தீரும்.
🌵 தினந்தோறும் சோற்றுக் கற்றாழை சோற்றை எடுத்து வெண்படையின் மீது பு சிவர வெண்படை குணமாகும்.
🌵 சோற்றுக் கற்றாழைச் சாறை தினமும் 2 டீஸ்பு ன் சாப்பிட்டு வந்தால், இதய இரத்த நாளங்களில் கொழுப்புச்சத்து படிவதால் ஏற்படும் இதய நோய்கள், அச்சம் தரும் உயிர் போக்கி நோய்களைத் தணிக்கும்.
🌵 சோற்றுக் கற்றாழையில் உள்ள கார்போஹைட்ரேட் மெட்டபாலிசம் சர்க்கரை நோய்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும். இது இரத்தத்தில் உள்ள உணவுக்குமுன் ஆன சர்க்கரை அளவையும், உணவுக்கு பின் ஆன சர்க்கரையின் அளவையும் குறைக்க உதவுகிறது.
🌵 தினந்தோறும் கற்றாழைச் சோற்றை மோரில் கலந்து குடித்து வந்தால் உடல் சு ட்டினால் ஏற்படும் முகப்பருக்கள், கட்டிகள், வெயிலில் அலைவதால் ஏற்படும் தோலின் கருமை மற்றும் மேல் தோலில் ஏற்படும் கருந்திட்டுக்கள் குணமாகும்.
🌵 முகத்திலுள்ள கரும்புள்ளிகள், தழும்புகள், வெயில் பாதிப்புகள் மற்றும் உலர்ந்த சருமம் என சரும நோய் எதுவாக இருந்தாலும் சிறிது கற்றாழைச் சாறை தினமும் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
🌵 சோற்றுக் கற்றாழையின் உள்ளிருக்கும் கூழ்ப்பகுதியில் சிறிதளவு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் குடலில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இதனால் வயிற்றிலுள்ள வாயு வெளியேற்றப்படுவதோடு மன இறுக்கமும் தணிந்து உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கின்றது.

Summary:Watering should be done in clean water by taking a mixture of rice aloe vera for water damage, body heat and body magnet. Then, in the same way, it will be reduced to the heat and the burning of the body.
.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.