ஒத்த வயது இளைஞர் /இளைஞிகள் வழக்கமாய் எங்காவது சந்திப்பது அரட்டையடிப்பது
மற்றும் சொல்பேச்சை கேளாதவரை.. பார்த்தால் இவர்களை வீட்டார்கள் இவ்விதம் குறிப்பிடுவது வழக்கமாகப் போய்விட்டது.
( பின்னால் வாழ்க்கை என்னும் பொதியை சுமக்க போகிறவர்கள்தானே என்று இளைஞர்/இளைஞிகளை கழுதையாக்கி பெரியோர்கள் அவமானப்படுத்துக்கிறார்களோ என்னவோ..)
சரி வாருங்கள் சரியான விளக்கத்தை பார்ப்போம்
" கழுதையின் தோல்.. கெட்டால் என்று அர்த்தம்.
அதாவது கழுதையில் தடித்த உடம்புத்தோலில் அரிப்பு அல்லது புண் போன்று ஏதும் வந்தால் சாதாரணமாக இருக்கும் சுவர்களை விட பாதி சிதிலமடைந்த சுவர்களை நாடிச் சென்று தன் உடம்பை அதன்மேல் தேய்த்துக் கொள்ளும்.
காரணம்
நல்ல சுவர்கள் சொரசொரப்பு அதிகம் இருக்காது. எனவே அது குட்டிச் சுவர் என்று சொல்லக் கூடிய சிதிலமடைந்த சுவர்களையே நாடும்.
இங்கு கெட்டால் என்பது அதன் தோல் கெட்டால் என்று அர்த்தம்.
அதனால் தான்
கழுதை கெட்டால் குட்டிச் சுவர்.
என்ற பழமொழி வந்தது.
Summary :
The same age youth / youth usually meet somewhere to chat
And it is usually the point that these people are talking about.
(The young / young people are assaulted by the adults who are going to carry the package of life behind)