சற்றுமுன்

சிதம்பர ரகசியம் !



சிதம்பரத்தை புறத்தில் தரிசித்தால் மட்டும் முக்தி கிடைக்காது. அதை அகத்தில் உணர்ந்து தரிசிக்க வேண்டும்.
சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி போன்ற தினங்களில் இயற்கை எய்தியவர் சொர்க்கத்திற்குப் போவார்கள் என்று பலரும்  நம்புகிறார்கள். முக்தி அடைந்தவர்களின் உடல் அழுகியோ, புழுத்தோ, நாறியோ,  சிதைந்தோ போகாது.  அவர்கள் உடலில் இருந்து  ஒளி வீசிக்கொண்டு இருக்கும். உடம்பிலிருந்து நறுமணம் இயற்கையாகவே கமழ்ந்து கொண்டிக்கும். தலை உச்சியில் ஞானாக்கினியாகிய தவ  உஷ்ணம் இருந்து கொண்டே இருக்கும். சிதம்பரத்தை புறத்தில் மட்டும் தரிசிப்பவர்களுக்கு  இந்நிலை இருக்கிறதா  என யோசித்துப் பாருங்கள்.
நமது முதுகுத் தண்டின் கீழ் முனையான மூலாதாரச் சக்கரத்திலிருந்து,  மேல் முனையான  சகஸ்கரதளச்  சக்கரம்  வரை  நரகலோகம்,  பூலோகம்,  பரலோகம் என  மூன்று  உலகங்கள்  உள்ளன.
  நமது நெஞ்சுக்குழியில் இருக்கும் அநாகதச்  சக்கரத்திலிருந்து  மூலாதாரச்  சக்கரம் வரை  இருப்பது  நரகலோகம். புருவமத்தியில் இருக்கும் ஆக்கினை சக்கரத்திலிருந்து நெஞ்சுக்குழியாக விளங்கும் அநாகதகச் சக்கரம் வரை இருப்பது பூலோக ஆகும்.
புருவ மத்தியில் இருக்கும் ஆக்கினைச் சக்கரத்தில் இருந்து உச்சியில் உள்ள சகஸ்கரதளம் வரை உள்ள பகுதி சொர்க்க லோகம் எனப்படும்.
 பொதுவாக, சகஸ்கர தளத்தில் இருந்து மூலாதாரச் சக்கரம் வரை மனம் சென்றுவந்து கொண்டே இருக்கும்.
 நரகலோகப் பகுதியில் மனம் செல்லும் போது அங்கே இன்ப துன்பங்களை அனுபவிக்கும். உதாரணத்திற்கு,  காமக் கழிவையும், மல ஜலங்களையும் கழிக்கும் போது இன்பமாக உணரப்படும். அந்த கழிவுகளை வெளியேற்ற முடியாத போது துன்பமாக உணரப்படும்.
மனம் , பூலோகப் பகுதியில் செல்லும் போதும் இன்ப துன்பங்களை அனுபவிக்கிறது.  கண் காது, மூக்கு, நாக்கு, தோல் ஆகிய ஐம்புலன்களாலே மனம் உலகத்தை உணருகிறது. கண்களுக்கு அழகான காட்சிகளைக் கண்டால் இன்பமாகவும்,  காணமுடியவில்லை என்றால் துன்பமாகவும் இருக்கும். இது போன்றே மற்ற புலன்களுக்கும் அதனதன் செயல்பாடுகளுக்கு ஏற்ப இன்ப, துன்பங்கள் அமைகிறது.
உடம்பில் உள்ள பூலோகத்திலும், நரகலோகத்திலும் இவ்விதம் இன்ப, துன்பங்களை அனுபவிக்கும் போது ஜீவ ஆற்றலாக விளங்கும் தெய்வீக காந்த சக்தி வீணாகும்.
ஆனால் தெய்வீக காந்த சக்தி வீணாகாத ஒர் உலகம் உண்டு.  அதன் பெயர் பரலோகம் அல்லது சொர்கலோகம்.  பரலோகப் பகுதியாகிய சிகாரம் எனும் உச்சியில் சதா காலமும் மனதை நிலை நிறுத்தும் போது, ஜீவ ஆற்றல் சேமிக்கப் படுகிறது. அங்கே இழப்பில்லை. துன்பமும் துயரமும் இல்லை. மனதை அங்கே நிலை நிறுத்தும் போது அனுபவிக்கப் படுவதே பேரின்பமாகும்.
சுருங்கச் சொல்லின், உடம்பினுள் இருக்கும் பூலோகத்தில் உள்ள ஐம் புலன்களோடு மனதை நரகலோகத்தில் செலுத்தினால் இன்ப, துன்பங்களை அனுபவித்து பிறவிப் பிணியில் சிக்கிச் சீரழிய நேரிடும். மனதோடு ஐம்புலன்களை பரலோகத்தில் இலயப்படுத்தினால் மரணமில்லாப் பெருவாழ்வு பெற்று, நித்தி்யர்களாகத் திகழலாம்.
புறத்தில் உள்ள சிதம்பரம் திருக்கோயிலும் தெய்வீக ஆற்றலோடு தான் விளங்குகிறது. சிதம்பரம் ஆகாயத் தலம் எனப்படும்.
 சித்தம் + பரம் = சிதம்பரம்,  சித் + அம்பரம்(வெளி) = சிதம்பரம்  ஆகும். சித்தத்தை பரலோகம் ஆகிய பரத்தில் இலயப் படுத்தினால் அகத்தினுள் சிதாகாசப்(சித் + ஆகாசம்)  பெருவெளியை நாம் உணரலாம்.  சித் எனும் அறிவை அம்பரம் ஆகிய வெளியில் இலயப்படுத்தி, அதுவே தானாக நிற்பதே சிதம்பர தரிசனம் ஆகும். சரியை, கிரியை, யோக நிலைகளில் இருப்பவர்கள், சிதம்பர தரிசனம் செய்யும் போது, விதி அமைப்புகள்  மாறி,  தலைக்கு வந்தது தலைப் பாகையோடு போனது என்கிற மாதிரி துன்பங்கள் நீங்கப் பெற்று, இகலோக இன்பங்களை மட்டும் அனுபவிப்பர்.
 ஞான நிலையில் இருப்பவர்கள் அங்கு சென்று தியானித்து வழிப் பட்டால், அங்கு ஆதிமூல நாதராக விளங்கும் திருமூலநாதப் பெருமானின் அருளாசியையும், ஆதிமூல நாதப் பெருமானோடு, இரண்டற ஒன்றிய மாணிக்கவாசகப் பெருமானின் அருளாசியையும்  பெற்று, முக்தி்யாகிய ஆன்ம விடுதலையைப் பெற்று, என்றும் நித்தியர்களாகத் திகழலாம்


Summary :You will not get salvation if you see Chidambaram on the other side. It must be realized in the interior.
Many believe that the natural sculptor goes to heaven on the days of Shivratri and Vaikuntha Ekadasi. The body of the victims will not fall, the worm, the worm, or the broken.

There are three worlds from the core of the back of our spine, the hell, the heaven, and the heaven, up to the wheel of the upper-faced Sahasrakattala.The hell is from hell to the molecular wheel from the helmet in our chest. From the wheel of the cheeks to the chest of the cheeks, the molecule of the eyebrow is the earth.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.