சற்றுமுன்

சிம்புவை பற்றி ரகசியம் வெளியாயிடுச்சி


திடீரென்று ரிலீஸாகி திணறடித்த ‘பீப்’ சாங் போல், திடீர் திடீர் என எதையாவது அறிவித்து ஆச்சரியப்படுத்துவது சிம்புவின் வழக்கம். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் நடித்துள்ள சிம்பு, நிறைய ஸீன்களைப் படமாக்கிவிட்டதால், இரண்டு பாகங்களாக வெளியிடப் போவதாக அறிவித்தார். இதனால், சிம்பு ரசிகர்கள் குஷியானார்கள். அடுத்து, அவர்களை ஆட்டம்போட வைக்கும் இன்னொரு சமாச்சாரமும் வெளியாகியிருக்கிறது. ஸ்ரேயா, தமன்னா, சனா கான் என மூன்று ஹீரோயின்களுக்கு ஜோடியாக மூன்று வேடங்களில் நடித்திருக்கிறார் சிம்பு என்றார்கள். ஆனால், மொத்தம் நான்கு கேரக்டர்களில் நடித்திருக்கிறார் என்ற ரகசியத்தை இப்போது வெளியிட்டுள்ளனர். அந்த கேரக்டருக்கும் ஜோடி உண்டா? இல்லை, மூன்றோடு அடங்கிவிடுவாரா சிம்பு என்பதுதான் கோடம்பாக்கத்தின் தற்போதைய கேள்வியாக இருக்கிறது.



aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.