‘மொட்ட சிவா கெட்ட சிவா’, ‘சிவலிங்கா’ என அடுத்தடுத்து படங்களை ரிலீஸ் செய்த ராகவா லாரன்ஸ், அடுத்த படத்துக்குத் தயாராகிவிட்டார். மீண்டும் அவர் பி.வாசு இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார் என்றும், ரஜினி நடித்த ‘மன்னன்’ படத்தின் ரீமேக் அது என்றும் தகவல்கள் வெளியாகின. மேலும், கரு.பழனியப்பன் இயக்கத்தில் அவர் நடிப்பதாகவும் செய்திகள் வெளிவந்தன. ஆனால், இவை இரண்டுமே தொடங்க தாமதமாவதால், ‘பாகுபலி’ இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் அசோஸியேட்டான மகாதேவ் இயக்கத்தில் நடிக்கப் போகிறார். ‘பாகுபலி’ படத்தின் கதையை எழுதிய ராஜமெளலியின் தந்தையான விஜயேந்திர பிரசாத், இந்தப் படத்தின் கதையையும் எழுதுகிறார். அதற்காக ‘பாகுபலி’ போல பிரமாண்டமான வரலாற்றுக் காவியம் என நினைத்துவிட வேண்டாம். ராகவா லாரன்ஸின் வழக்கமான கமர்சியல் படம் போலத்தான் இருக்குமாம். ஹீரோயினாக காஜல் அகர்வாலிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
Summary:Raghava Lawrence, who has released films as 'Motta Siva Bad Siva' and 'Shivlinga', is ready for the next film. Once again, he has acted in a film directed by P.Vasu and the remake of Rajini's 'Mannan'.Furthermore, news is reported that he is acting in the Kalaipanappan movement. But both of these are delayed by the start of the film, which is going to be directed by Mahadev, an associate of 'Pakubali' director SS Rajamalie. Rajamalai's father, Vijayendra Prasad, who wrote the story of 'Pakubali', writes the story of the film