சற்றுமுன்

‘பாகுபலி-2’ இயக்குனர் ராஜமெளலி மீது காவல் நிலையத்தில் புகார்


பெரிய படங்கள் வெளியாகும்போது, அதில் உள்ள சில விஷயங்கள் சர்ச்சையாவதும் அல்லது சர்ச்சையாக்கப்படுவதும் வழக்கம். அப்படித்தான், ‘பாகுபலி-2’ தங்கள் சமூகத்தை இழிவுபடுத்துவதாகக் கூறி எஸ்.எஸ்.ராஜமெளலி மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவைச் சேர்ந்த அரீகதிகா பொரடா சமிதி வாழ் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், ஹைதராபாத் பஞ்சாராஹில்ஸ் காவல் நிலையத்தில் இந்த புகாரை அளித்துள்ளனர். சத்யராஜ் பேசும் வசனத்தில், ‘கதீகா சீக்கட்டி’ என்ற வார்த்தை இடம்பெறுகிறதாம். ‘இது தங்கள் சமூகத்தை ஒடுக்கும் செயல்’ என்று அவர்கள் புகாரில் தெரிவித்துள்ளனர். அத்துடன், ‘நாங்கள் மனிதாபிமானமற்றவர்கள் போல் சித்தரிக்கப்பட்டுள்ளோம். இதனால், எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் மனம் புண்பட்டுள்ளது. எனவே, அந்த வசனத்தை நீக்க வேண்டும்’ என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

Summary :When big photos are released, some things in it are controversial or controversial. So, the complaint was filed against SS Rajamulai by saying that 'Pakubali-2' was humiliating their community. The members of the Areekatiga Boda Samiti community in Andhra Pradesh have filed a complaint in Hyderabad Banjara Hills police station.
In the Sathyaraj speaking verse, the word 'kaithiga sikkatti' comes from the word. They said in the complaint that it was a "act of oppression of their community". And, 'We are depicted as being inhuman. Thus, the minds of our community are offended. Therefore, they have to remove that verse. '

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.