சற்றுமுன்

பாஹுபலி 2 1000 கோடி வசூல்

பாஹுபலி 2 திரையிடப்பட்ட ஒன்பது நாட்களில் இந்தியாவில் ரூ. 800 கோடியையும், அயல் நாடுகளில் ரூ. 200 கோடியையும் வசூலித்து இச்சாதனையை படைத்துள்ளது. முதல் நாளில் ரூ. 121 கோடியில் துவங்கிப் பின், வெகு வேகமாய் தொடர்ச்சியாய் அடுத்தடுத்த நாட்களில் பல நூறு கோடிகளைக் கடந்து ஒன்பதாவது நாளில் ரூ. 1000 கோடியைத் தொட்டிருக்கிறது என்று பிரபாஸ் தெரிவித்துள்ளார்.

தேசங்களைக் கடந்து, மொழிகளைக் கடந்து, பாஹுபலி 2 க்கு கிடைத்திருக்ககூடிய இந்த இமாலய வெற்றிக்குத் தன்னுடைய ரசிகர்களுக்கும், இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி அவர்களுக்கும் பிரபாஸ் தன்னுடைய நன்றியை தெரிவித்துள்ளார்.

மேலும் இத்தனைப் பிரம்மாண்டமான ஒரு வரலாற்றுக் காவியத்தில், என் மீது நம்பிக்கை வைத்து, என்னையும் இந்த பயணத்தில் இணைத்துக்கொண்டு, எனக்கொரு முக்கிய பங்களித்து, என்னை ஊக்குவித்து சிறப்புற இயக்கி, இந்த மாபெரும் வெற்றிக்கு வித்திட்ட இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி அவர்களுக்கு மகிழ்ச்சியோடும், நெகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் என்னுடைய நன்றியை தெரிவிக்கிறேன் என்று பிரபாஸ் தெரிவித்துள்ளார்.

Bahubali 2 screened in Rs. 800 crores in foreign countries and Rs. It has collected 200 millions of dollars. On the first day of Rs. Starting at 121 crores, it is very fast and continuing in the subsequent days, crossing hundreds of crores, on the ninth day Prabhas said he has touched 1000 crore.


aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.