தேசிய விருதுபெற்ற இயக்குநர் சித்தார்த்த சிவா இயக்கத்தில், நிவின் பாலி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கடந்த வாரம் வெளியான மலையாளப் படம் ‘சஹாவு’. அரசியல் படமான இதில், சரிபாதி ரொமான்ஸுக்கும், காமெடிக்கும் தரப்பட்டுள்ளது. இந்தப் படத்தில், கிருஷ்ண குமார், சஹாவு கிருஷ்ணன் என இரண்டு வேடங்களில் நடித்துள்ளார் நிவின் பாலி. இந்தப் படத்தைப் பார்த்த பல பிரபலங்கள், நிவின் பாலிக்கு தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
நடிகரும், இயக்குநருமான வினித் ஸ்ரீநிவாசன் இயக்கிய நான்கு படங்களில், மூன்று படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார் நிவின் பாலி. அவர், “நிவின் பாலியை ஒரு நடிகராக என்னால் பார்க்க முடியவில்லை. சஹாவு கிருஷ்ணன் என்ற கேரக்டராகவே அவர் மாறிவிட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.