நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு, தமிழ் மற்றும் தெலுங்கில் படமாக எடுக்கப்படுகிறது. கீர்த்தி சுரேஷ், சமந்தா நடிக்கும் இந்தப் படத்தில், சாவித்ரி கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். சமந்தா, நடிகையாகவே வருகிறார் என்றார்கள். ஆனால், தற்போதுதான் சமந்தாவின் கேரக்டர் என்ன என்பது தெரியவந்துள்ளது. பத்திரிகையாளராக நடிக்கிறாராம் சமந்தா.
அவர் சொல்வது போலத்தான் இந்தக்கதை விரியுமாம். இதற்கு முன் இந்த மாதிரி கேரக்டரில் சமந்தா நடித்ததே இல்லையாம். அதனால், மிகவும் ஆர்வமாக இருக்கிறாராம் சமந்தா. அத்துடன், பத்திரிகையாளராக நடிப்பதற்கு, சில பத்திரிகையாளர்களிடம் பேசி பயிற்சியும் எடுத்து வருகிறாராம்.