கேரக்டர் ரோல்களில் நடித்துவந்த விஜய் சேதுபதி, சீனு ராமசாமி இயக்கிய ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அந்தப் படத்தில் நடித்த பிறகுதான் பலரால் அடையாளம் காணப்பட்டவர், தொடர்ந்து ஹீரோவாகவே நடிக்க ஆரம்பித்தார். இரண்டாவது முறையாக சீனு ராமசாமி இயக்கத்தில் நடித்த ‘இடம் பொருள் ஏவல்’, இன்னும் ரிலீஸாகவில்லை.
எனவே, மீண்டும் சீனு ராமசாமி இயக்கத்தில், ‘தர்மதுரை’ படத்தில் நடித்தார். அந்தப் படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி கண்டது. இந்நிலையில், ‘மாமனிதன்’ என்ற படத்தை இயக்கப் போகிறார் சீனு ராமசாமி. இதிலும் ஹீரோ விஜய் சேதுபதி தானாம். யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, அவருடன் இணைந்து இளையராஜாவும் இசையமைக்கிறாராம்.