சுந்தர்.சி இயக்கத்தில் மிகப் பிரமாண்டமாகத் தயாராக இருக்கும் படம் ‘சங்கமித்ரா’. ஜெயம் ரவி – ஆர்யா இருவரும் இணைந்து நடிக்கும் இந்தப் படத்தில், ஹீரோயினாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார். வரலாற்றுக்கதை என்பதால், பிரமாண்டமான சண்டைக் காட்சிகளும், போர்க் காட்சிகளும் இந்தப் படத்தில் இருக்கின்றதாம்.
எனவே, தன்னுடைய உடலை ஃபிட்டாக வைத்திருப்பதோடு, சண்டை போடவும் கற்று வருகிறார் ஸ்ருதி. இதற்காக, லண்டனில் இருந்து பயிற்சியாளரை வரவழைத்துள்ளார். அவரிடம் வாள் சண்டை கற்றுக் கொள்ளும் ஸ்ருதியின் புகைப்படம் ரிலீஸாகியிருக்கிறது. வாள் சண்டையின் அடிப்படைகளையும், தந்திரங்களையும் அவர் கற்று வருகிறாராம்.