ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் குமார், எமி ஜாக்சன் நடித்துவரும் படம் ‘2.0’. ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் இந்தப் படத்தை, லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதுவரை இந்திய சினிமாவிலேயே இல்லாத அளவிற்கு, 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில், ஹீரோவாக நடிக்கும் ரஜினியைவிட, வில்லனாக நடிக்கும் அக்ஷய் குமாருக்கு அதிக சம்பளம் என்கிறார்கள்.
நாள் ஒன்றுக்கு இரண்டு கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறாராம் அக்ஷய். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புடன், வி.எஃப்.எக்ஸ். உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நடைபெற்று வருகின்றன. பல்வேறு இந்திய மொழிகளில், தீபாவளி விருந்தாக திரைக்கு வருகிறது இந்தப் படம்.