ஆர்யா ஜோடியாக கேத்ரின் தெரேசா நடித்துள்ள ‘கடம்பன்’ படம் இன்னும் இரண்டு நாட்களில் ரிலீஸாக இருக்கிறது. இதுகுறித்துப் பேசிய கேத்ரின் தெரேசா, ஆர்யா சாக்லேட் பாய் கிடையாது என்று தெரிவித்துள்ளார். “இந்தப் படத்தின் ஷூட்டிங்கின் போதுதான் ஆர்யாவை முதன்முதலாகப் பார்த்தேன். உடலைக் கட்டுமஸ்தாக மாற்றி, மிகப்பெரிய மனிதன் போல இருந்தார்.
இந்த மாற்றத்திற்காக அவர் நிறைய உழைத்திருக்க வேண்டும். திரையில் பார்க்கும்போது இது மிகவும் பிரமாண்டமாய் இருக்கும்” என்கிறார் கேத்ரின் தெரேசா. அவருடைய நடனம் சரியாக இல்லை என முன்பு சொல்லப்பட்ட விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், தான் தற்போதுதான் முறையாக நடனம் கற்று வருவதாகக் குறிப்பிட்டார்.