13 – 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ராணி பத்மினியின் (பத்மாவதி) வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்கிறார் சஞ்சய் லீலா பன்சாலி. ‘பத்மாவதி’ என்று பெயரிடப்பட்ட இந்தப் படத்தில், ராணியாக நடிக்கிறார் தீபிகா படுகோனே. எனவே, அவரைப் பற்றித் தெரிந்து கொள்வதற்காக நிறைய உழைக்கிறார்.
பத்மாவதி வாழ்ந்த ராஜஸ்தான் பற்றிய புத்தகங்களை இதற்காகப் படித்த தீபிகா, அடுத்து ராஜஸ்தானுக்கே நேரடியாகச் சென்றுள்ளார். ராஜஸ்தானில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் தான் ரானா சிங்கைத் திருமணம் செய்து கொண்டார் பத்மாவதி.
எனவே, அங்கு சென்ற தீபிகா, அங்குள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களையெல்லாம் பார்வையிட்டுள்ளார். “வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் படத்தின் ஷூட்டிங் தொடங்குகிறது” எனத் தெரிவித்துள்ளார் தீபிகா படுகோனே.