இந்திய மனித உழைப்பையும், தொழில்நுட்பத்தையும் கொண்டு உருவாகும் தயாரிப்புகளுக்கு, ‘மேக் இன் இந்தியா’ அந்தஸ்து கொடுத்து கவுரவித்து வருகிறது பா.ஜ.க. அரசு.
இந்த அந்தஸ்து பெறும் தயாரிப்புகளுக்கு, சில சலுகைகள் வழங்கப்படும். ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் ‘2.0’ படத்துக்கு ‘மேக் இன் இந்தியா’ அந்தஸ்து வழங்கப்பட இருக்கிறது. இதன் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் இந்தியாவிலேயே நடைபெற்றுள்ளது.
வி.எஃப்.எக்ஸ். முதற்கொண்டு, தொழில்நுட்பப் பணிகள் அனைத்தும் இந்தியாவிலேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், ஹீரோயினான எமி ஜாக்சன் லண்டனாச்சே… நடிகர்கள் முக்கியமில்லையாம். அவர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் வந்திருக்கலாம் என்று சொல்லி ‘மேக் இன் இந்தியா’ அந்தஸ்தைத் தர இருக்கிறது மத்திய அரசு. அப்படியாச்சும் ரஜினி மசிவாரா?