🔆 ஞானம் என்னும் நெருப்பில் அனைத்தும் சுட்டெரிக்கப்பட்ட பின் எஞ்சுவது பரிசுத்தமான சிவதத்துவமே என்பதை திருநீறு (விபு+தி) குறிக்கின்றது.
🔆 நெற்றியில் திருநீறு தரித்துக் கொள்வது உயர்ந்த தத்துவத்தை விளக்குகிறது. நாடாண்ட மன்னனும், மாசறக் கற்றவரும் கடைசியில் சாம்பலாகத் தான் போகப் போகிறோம். இந்த வாழ்க்கை மாயமானது என்பதை விபு+தி உணர்த்துகிறது.
🔆 பிறக்கும்போதும் மண்ணிலே பிறந்தோம். சாகும் போதும் மண்ணிலே தான் சாகப் போகிறோம். மண்ணிலே பிறந்த மரம் இறுதியில் மண்ணிலேயே மட்கி மண்ணோடு மண்ணாகத் தான் போகிறது. நம்மை முடிவில் அடக்கிக் கொள்ளப் போகிற தத்துவம் அதுதான். இதை நினைவுபடுத்திக் கொள்ளவே, நெற்றியில் விபு+தி அணிகிறோம்.
🔆 மனித உடலில் நெற்றி என்பது மிக முக்கிய பாகம், அதன் வழியாக மிக அதிகமாக சக்தி வெளிப்படும், உள்ளிழுக்கவும் செய்யும். இது ஒரு வர்ம ஸ்தானம் கூட. சு+ரிய கதிர்களின் சக்திகளை இழுத்து நெற்றி வழியாக கடத்தும் வேலையை திருநீர் செவ்வனே செய்யும், அதனால்தான் நெற்றியில் திருநீறு பு+சுகிறார்கள்.
🔆 உடலில் திருநீறு அணியக்கூடிய இடங்களாகப் 18 இடங்கள் குறிப்பிடப்படுகின்றன.
🔆 தலை நடுவில் (உச்சி)
🔆 நெற்றி
🔆 மார்பு
🔆 தொப்புளுக்கு சற்று மேல்.
🔆 இடது தோள்
🔆 வலது தோள்
🔆 இடது கையின் நடுவில்
🔆 வலது கையின் நடுவில்
🔆 இடது மணிக்கட்டு
🔆 வலது மணிக்கட்டு
🔆 இடது இடுப்பு
🔆 வலது இடுப்பு
🔆 இடது கால் நடுவில்
🔆 வலது கால் நடுவில்
🔆 முதுகுக்குக் கீழ்
🔆 கழுத்து
🔆 வலது காதில் ஒரு பொட்டு
🔆 இடது காதில் ஒரு பொட்டு
🔆 வடக்குதிசை அல்லது கிழக்கு திசை நோக்கி நின்றுகொண்டு, வலது கையின் பெருவிரல் மோதிர விரல் ஆகிய இரண்டு விரலினாலும் விபு+தியினை எடுத்து கீழே சிந்தாமல் ஆட்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல் ஆகிய மூன்று விரல்களிலும் பெருவிரலினால் பரவி அண்ணாந்து நின்று பு+சிக்கொள்ளல் வேண்டும். எடுக்கும் போது 'திருச்சிற்றம்பலம்" என்றும் பு+சும் போது 'சிவாயநம" அல்லது 'சிவசிவ" என்று உதடு பிரியாது மனம் ஒன்றிச் சொல்லுதல் வேண்டும்.
🔆 திருநீறு கிருமிநாசினியும் கூட. அதனை உடல் முழுவதும் பு+சுவதனால் உடலில் உள்ள துர்நாற்றம் மறையும் என இயற்கை மருத்துவம் கூறுகிறது. நெற்றியில் தரிப்பதனால் தலைக்குள் கோர்க்கும் நீரினை திருநீறு வெளியேற்றுகிறது.