அசோக் குமார் இயக்கத்தில் விக்ரம்பிரபு, நிக்கி கல்ரானி நடித்துள்ள படம் ‘நெருப்புடா’. வடசென்னையில் வசிக்கும் 5 தீயணைப்பு வீரர்களைப் பற்றிய கதை இது. “தமிழ் சினிமாவுக்கு போலீஸ் கதைகள் புதிதல்ல. ஆனால், ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்க நினைத்தேன். அதனால் தான், போலீஸ் துறையின் ஒரு பகுதியான தீயணைப்பு துறையைத் தேர்ந்தெடுத்தேன்” என்கிறார் அசோக் குமார்.
இந்தப் படத்தில் இரண்டு மிகப்பெரிய தீயணைப்பு சம்பவங்கள் இருக்கிறதாம். அவற்றை ஒரிஜினலாகப் படம்பிடிப்பதா அல்லது கிராஃபிக்ஸ் பண்ணிக் கொள்ளலாமா என்று விவாதமே நடந்திருக்கிறது. ‘ஒரிஜினலாகப் பண்ணால் தான் நன்றாக இருக்கும்’ என்று சொல்லி, அனைவருக்கும் தைரியமூட்டியிருக்கிறார் விக்ரம்பிரபு. தகுந்த பாதுகாப்பு சாதனங்களுடன் படம் பிடித்தாலும், அதை ஷூட் செய்து முடிக்கும்வரை ஒருவித பயத்துடன் தான் இருந்தாராம் இயக்குநர்.