மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படத்தின் வெற்றியால் தமிழ் சினிமாவுக்குள் காலடி வைத்தவர் மடோனா செபாஸ்டியன். விஜய் சேதுபதி ஜோடியாக அவர் நடித்த ‘காதலும் கடந்து போகும்’, ‘கவண்’ இரண்டு படங்களிலும் அவர் நடிப்பு ஓகே தானே தவிர, பெரிதாக ஒன்றுமில்லை. அடுத்து, தனுஷ் இயக்கியுள்ள ‘பவர் பாண்டி’ படத்திலும் நடித்துள்ளார்.
ஆனால், அதற்குள் அவர் செய்யும் அட்டகாசத்துக்கு அளவில்லை என்கிறார்கள். தன்னை நயன்தாரா ரேஞ்சுக்கு பில்டப் செய்துகொண்டு, படத்தின் புரமோஷன் பணிகளுக்கு வர மறுக்கிறாராம். சமீபத்தில் நடந்த ‘பவர் பாண்டி’ பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை. படம் ரிலீஸாக இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் புரமோஷனுக்கு வரச்சொல்லி மேனேஜரிடம் சொல்லி அனுப்பினால், அவரையும் திட்டி அனுப்பியிருக்கிறார் மடோனா.