‘அப்பா’ படத்தை மலையாளத்தில் ரீமேக் செய்து வருகிறார் சமுத்திரக்கனி. ஹீரோவாக ஜெயராம் நடிக்க, அவருக்கு ஜோடியாக வரலட்சுமி ஒப்பந்தமானார். ஆனால், ஷுட்டிங் தொடங்கிய இரண்டாவது நாளே, ‘ஆணாதிக்கம் பிடித்த தயாரிப்பாளருடன் பணியாற்ற விரும்பவில்லை’ என்று சொல்லி விலகிவிட்டார்.
தற்போது அவருக்குப் பதிலாக இனியா நடித்து வருகிறார். இந்நிலையில், வரலட்சுமி படத்தில் இருந்து விலகியதற்கு காரணம், ஓட்டல் பிரச்னைதான் எனத் தெரியவந்துள்ளது. வரலட்சுமி தங்குவதற்காக நாள் வாடகை 7 ஆயிரம் ரூபாயில் ஓட்டலில் ரூம் போட்டுள்ளனர்.
ஆனால், 12 ஆயிரம் ரூபாய் வாடகை கொண்ட ஓட்டலில் தான் தங்குவேன் என அடம்பிடித்த வரலட்சுமி, ஜெயராம் மற்றும் சமுத்திரக்கனியிடம் இந்த விஷயத்தைக் கொண்டு சென்றுள்ளார். அவர்கள் வரலட்சுமியின் முடிவுக்கே விட்டுவிட, பொட்டியைக் கட்டிவிட்டார் வரு.