நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக, விஷால், ஆர்யா மற்றும் கார்த்தி இணைந்து நடிப்பதாக கடந்த வருடம் அறிவித்தனர். ஆனால், தற்போது அந்த பிளான் கேன்சல். ஆர்யா அதிலிருந்து நீக்கப்பட்டுவிட்டார்.
அத்துடன், நடிகர் சங்கத்திற்காக நடிக்கும் பிளானும் கேன்சல். விஷால், கார்த்தி இருவரும் முதன்முறையாக இணைந்து இந்தப் படத்தில் நடிக்கின்றனர். ‘கறுப்பு ராஜா வெள்ளை ராஜா’ என்று பெயரிடப்பட்ட இந்தப் படத்தை பிரபுதேவா இயக்க, ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.
இதில், விஷாலுக்கு ஜோடியாக, ‘வனமகன்’ படத்தில் நடித்துள்ள சாயிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கார்த்திக்கு ஏற்ற ஜோடியைத் தேடி வருகின்றனர். தற்போது ‘யங் மங் ஜங்’ படத்தில் நடித்துவரும் பிரபுதேவா, அந்தப் படம் முடிந்ததும் இதை இயக்குகிறார்.