சற்றுமுன்

மனிதருள் மரணித்த மனிதம் - கவிதை

கண்ணாடி சுவருக்குள்
கண்ணைக் கவரும் உணவு வகைகள்...
கண்ணாடிக்கு வெளியே
உணவைப் பார்த்து ஏங்கும் சிறுவன்.!

பசி பட்டினியில் பல்லாயிரம் பேர்.
குப்பைத் தொட்டியில்
குவியக் கொட்டிய சோறு !!!
எத்தனைபேர் பீராய்ந்து
உண்கிறார்கள்  பாரு!
இதில் மனிதனும்  மிருகமும் யாரு யாரு??????

உண்பவை விற்பவை எல்லாமே கலப்படம் ..!!!
மண்புழு கூட விற்பனைக்கு எனப்படும்!!!
துணிகள் குறைத்து அடிதடிகள் நிறைத்தால்
துணிவு ;வீரம் ;விவகாரமான திரைப்படம்!

லஞ்ச ஊழல் கருப்புப் பணமே
அரசியல் முதலைகள் காட்டிய இருப்பிடம்.
அச்சம் மிச்சம் சொச்சம் தானே
குடிமக்கள் மச்சு வீட்டின் பிறப்பிடம்!
கூழும் கஞ்சியும் குடிப்பவன் குறிப்பிடும்...
கருணை என்பதும் கூட ஏமாற்றிப் பறித்தே தரப்படும்!!!!!

அழுக்கு நீரும்; அமிர்தம் கோரும்!
கொடுக்கும் நோயில்;
உடல் படுக்கும் பாயில்!
எரிக்கும் தீயில்; எரிமலைத் தீவில்!
பணம் பறிக்கும் கோயில்..
ஏதேதோ வருகுது வாயில்!!
மாறாத சாவில்...
நியாயங்கள் புரளுது நாவில்!

வருங்காலம் இவற்றால் கற்பதும் என்ன?
வருடங்கள் போனாலும் நிற்பதும் என்ன?
தன்மானம்;பெண்மானம்-ஆவதும் என்ன?
வருமானம் தவிர வாழக் கிடைப்பதும் என்ன?

புழுத்துக் கிடக்குது புல்லர்களைப் புதைத்த சுடுகாடு.
நட்டநடு இரவில் தெருநாய்களும் உறவில்...ஓடு!
அனாதைக் குழந்தைகள் உருவாகுது கருவில்....(கேடு?)
எங்கே இருக்குது வீடு?
இதற்குப் பெயரா நாடு?

மனிதம் திணறித் தவிக்குது..
நெஞ்சு வலியால் துடிக்குது.
கெஞ்சும் குரலில் தடுக்குது...
முடிவில் மரணித்தேதான் போகுது!!!.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.