பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி நடித்த படம் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’. இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘ப்ப்ப்பா…’ டயலாக், இன்றளவும் பிரபலம். கிட்டத்தட்ட 5 வருடங்களுக்குப் பிறகு விஜய் சேதுபதியும், பாலாஜி தரணீதரனும் இணைகின்றனர். இடையில், காளிதாஸ் ஜெயராம், மேகா ஆகாஷை வைத்து ‘ஒரு பக்கக் கதை’ படத்தை எடுத்தார் பாலாஜி.
ஆனால், அந்தப் படம் எப்போது ரிலீஸ் ஆகும் எனத் தெரியவில்லை. இதனால், செண்டிமெண்டாக முதல் படத்தில் நடித்தவர்களை வைத்து ‘சீதக்காதி’ என்ற படத்தை ஆரம்பித்து விட்டார். இந்தப் படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இதில், விஜய் சேதுபதி ஜோடியாக காயத்ரி நடிக்கிறார். ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘புரியாத புதிர்’ படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் காயத்ரி.