சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான ‘தர்மதுரை’ படத்திற்கு இசையமைத்திருந்தார் யுவன் சங்கர் ராஜா. படம் 100 நாட்கள் ஓடி வெற்றி கண்டது. இந்நிலையில், தன்னுடைய அடுத்த படத்துக்குத் தயாராகிவிட்டார் சீனு ராமசாமி.
இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கப் போகிறார். இந்தப் படத்தைத் தயாரிக்க இருப்பது, யுவன் சங்கர் ராஜா. தற்போது, நயன்தாரா நடிப்பில் ‘கொலையுதிர் காலம்’ படத்தைத் தயாரித்துவருகிறார் யுவன்.
சீனு ராமசாமி இயக்கும் படத்திற்கு, இளையராஜாவுடன் இணைந்து யுவனும் இசையமைக்கலாம் என ஒரு தகவல். இரண்டு பேரும் இணைந்து இசையமைத்தால், நிச்சயம் வேற லெவல் இசையை எதிர்பார்க்கலாம்.