பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் படம், மும்பையை அடிப்படையாகக் கொண்டு படமாக்கப்பட இருப்பதாகத் தெரிகிறது.
அதுவும், மும்பையில் வாழ்ந்த மிஸ்ரா ஹாஜி மஸ்தான் என்ற தாதாவின் வாழ்க்கையைத்தான் படமாக எடுக்கப் போகிறாராம். கிட்டத்தட்ட ‘பாட்ஷா’ போலவே மக்கள் தலைவனாகவும், தாதாவாகவும் அறியப்பட்டவர் மிஸ்ரா.1926 முதல் 1994 வரை வாழ்ந்த மிஸ்ராவுக்கு, தமிழ் நன்றாகப் பேசத் தெரியும்.
போதைப்பொருள் கடத்தல், சினிமாவுக்கு ஃபைனான்ஸ் செய்தல், ரியல் எஸ்டேட் போன்ற தொழில்களைச் செய்தவர். அவருக்கு வெள்ளை நிறம் என்றால் ரொம்பப் பிடிக்கும். உடைகள், ஷூ, கார் என எல்லாமே வெள்ளை நிறத்தில்தான் இருக்கும். இந்த கேரக்டரில் தான் ரஜினி நடிக்கப் போகிறார் என்கிறார்கள்.