‘நாய் சும்மா இருந்தாலும், அதன் வால் சும்மா இருக்காது’ என்பார்கள். கிட்டத்தட்ட ரஜினி விஷயத்தில் அதுதான் நடக்கிறது. தானுண்டு, தன் வேலையுண்டு என்று இருக்கும் ரஜினியை, ‘அரசியலுக்கு வா…’ என்று அடம்பிடித்து அழைத்துவரப் பார்க்கிறார்கள் அவருடைய ரசிகர்கள். ஆனால், ‘ஒருமுறை பட்டதே போதும்’ என்றெண்ணி, மெளன விரதத்திலேயே காலத்தைக் கழிக்கிறார் ரஜினி.
இந்நிலையில், ரஜினியை அரசியலுக்கு வரச்சொல்லி சென்னை மற்றும் கோவையில் போஸ்டர்கள் முளைத்துள்ளன. கோவை மாவட்ட மக்கள் நல்வாழ்வு மன்றம் என்ற பெயருடன் இருக்கும் போஸ்டரில், ‘மக்கள் வாழவேண்டும் என்றால், நீங்கள் ஆள வேண்டும்’ என்ற வாசகம் இடம்பெற்றிருக்கிறது.
அத்துடன், ரஜினியின் முழு உருவ புகைப்படமும் அதில் அச்சிடப்பட்டுள்ளது. ‘இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ஒடம்ப ரணகளமாக்கிடுறாங்க…’ என்ற ரஜினியின் மைண்ட் வாய்ஸ் உங்களுக்கு கேட்குதா?