இயக்குநர் பாரதிராஜாவின் ‘பாரதிராஜா பன்னாட்டு திரைப்பட பயிற்சிக் கல்லூரி’யின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில், கமல், ரஜினி, மணிரத்னம், அம்பிகா, ராதா, சுஹாசினி உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய ரஜினி, “திரைத்துறை என்பது பாரதிராஜாவின் உயிரோடு பின்னிப் பிணைந்தது.
எவ்வளவு திறமையாக நடித்தாலும், ‘சிறந்த நடிகன்’ என ஒத்துக் கொள்ளவே மாட்டார். என்னை அவருக்குப் பிடிக்கும், ஆனால் பிடிக்காது” என்றார். ‘தடைகளைத் தாண்டி கலைஞனை உருவாக்கத் தெரிந்தவர் பாரதிராஜா’ எனக் குறிப்பிட்ட கமல், “தான் கற்ற வித்தையை மற்றவர்க்கும் கற்றுக்கொடுக்க உள்ள பாரதிராஜா, சமண முனிவருக்கு ஈடானவர்” என்று பேசினார்.