கிரிக்கெட் வீரர் சச்சினின் வாழ்க்கை வரலாறு, ‘சச்சின் : எ பில்லியன் ட்ரீம்ஸ்’ என்ற பெயரில் படமாகியிருக்கிறது. ஜேம்ஸ் எர்ஸ்கின் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில், சச்சின் நடித்துள்ளார்.
அத்துடன், ஷேவாக், தோனி உள்ளிட்ட சில கிரிக்கெட் வீரர்களும் நடித்திருக்கின்றனர். கிரிக்கெட் மட்டுமின்றி, அவருடைய குடும்ப வாழ்க்கையும் இந்தப் படத்தில் காட்டப்பட்டுள்ளது. மே மாதம் 26ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாகிறது.
ஹிந்தியில் உருவாகியிருக்கும் இந்தப் படம், இந்தியாவின் பிற மாநில மொழிகளிலும் வெளியிடப்படுகிறது. இந்தப் படத்திற்கு இசை அமைத்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான், சச்சினை திரையில் காண ஆர்வத்தோடு காத்திருக்கிறாராம்.