புதுமுகங்கள் நடிப்பில் ‘திருப்பதிசாமி குடும்பம்’ என்ற தலைப்பில் ஒரு படம் தயாராகியுள்ளது. இந்தத் தலைப்பைக் கேள்விப்பட்ட இயக்குநர் லிங்குசாமி, தன்னுடைய மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார். “என்னுடைய முதல் படத்துக்கு இந்த தலைப்பைத்தான் வைக்க நினைத்தேன். ஆனால், ஆர்.பி.செளத்ரி தயாரிப்பாளராக மாறிய பிறகு, ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ என்று பெயர் மாற்றினோம்.
அதைப் பதிவு செய்ய சென்ற போதுதான், அந்தப் பெயரை ஏற்கெனவே இயக்குநர் சேரன் பதிவுசெய்து வைத்திருப்பது தெரிய வந்தது. அவரிடம் அந்த தலைப்பைக் கேட்டபோது, தர மறுத்தார். எனவே, அதில் உள்ள ‘ஆனந்தம்’ என்ற முதல் வார்த்தையை மட்டும் தலைப்பாக வைத்தோம். முதல் படத்தின் தலைப்பிலேயே நிறைய மாற்றங்கள் ஏற்பட்டது அப்போது எனக்கு கூச்சமாக இருந்தது” என்று மனம் திறந்துள்ளார் லிங்குசாமி