சிம்புவை வைத்து படம் எடுப்பது என்பது, வேலியில் போற ஓணானை எடுத்து வேட்டிக்குள் விட்டுக் கொள்வது மாதிரி. அந்தக் கதை தெரிந்தும் சிம்புவை வைத்து படத்தை ஆரம்பித்துவிட்டு, பின்னர் ‘குத்துதே… குடையுதே…’ என்று கதறுபவர்கள் ஏராளம். அந்த நிலையில்தான் இருக்கிறார்கள் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனும், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனும். ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தை ஆரம்பித்துவிட்டு, அவர்கள் படும் கஷ்டத்தை தனி படமாக எடுக்கலாம் போலிருக்கிறது.
முதல் ஷெட்யூலிலேயே வேலையைக் காட்ட ஆரம்பித்த சிம்புவை, டி.ஆரை வைத்து பஞ்சாயத்து பண்ணித்தான் ஷூட்டிங் வரவைக்க முடிந்தது. ஆனாலும், இன்னும் படத்தை முடித்தபாடில்லை. தயாரிப்பாளரும், இயக்குநரும் சேர்ந்து ஒரு நடிகையை ஒப்பந்தம் செய்தால், சிம்பு ஒரு நடிகையைக் காண்பித்து, ‘இவரை ஒப்பந்தம் செய்யுங்கள்’ என்கிறாராம். அப்படித்தான் நீது சந்திராவை இவர்கள் ஒப்பந்தம் செய்ய, அவரோ சனா கான் தான் வேண்டும் என அடம்பிடித்து சாதித்துக் கொண்டார்.
இந்த ஒரு படத்திற்காக சிம்புவுடன் போராட்டம், உண்ணாவிரதம் என அவர் வீட்டு நாய்க்குட்டியை விடக் கேவலமாக சிம்பு வீட்டிலேயே காவல் காத்து வருகிறார் ஆதிக் ரவிச்சந்திரன். விரைவில் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சங்கங்களில் சிம்பு மீது புகார் அளிக்கப்பட இருக்கிறது. பஞ்சாயத்து செய்து பைசல் பண்ணி வைப்பாரா விஷால்?