சிவகார்த்திகேயனின் மாபெரும் வெற்றிப்படமான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் இடம்பெற்ற பாடல் ‘ஊர காக்க உண்டான சங்கம்’. இந்தப் பாடலில் இடம்பெறும் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ என்ற சொல்லாடலை, விஷ்ணு விஷால் நடிக்கும் அடுத்த படத்துக்கு தலைப்பாக வைக்கப் போகிறார்களாம்.
புதுமுகம் செல்லா இயக்கும் இந்தப் படத்தை, விஷ்ணு விஷாலே தயாரிக்கிறார். அவருக்கு ஜோடியாக ரெஜினா நடிக்கிறார். இன்னொரு ஹீரோயினாக நடிக்க ஓவியாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.