சற்றுமுன்

இந்த வருடம் 'ஹேமலம்ப சம்வத்சரம்' என்று அழைக்கப்படுகிறது


இதுவரை நடைபெற்றது 'துர்முக' வருடமாகும்
'துர்முக' என்றால் 'கேடுவிளைவிக்கிற' என்ற வராஹமிஹிரர் வாக்குப்படி அதன் கெடு பலனை நம் நாட்டில் நிறையவே நாம் உணர்ந்தோம்.

இந்த வருடம் 'ஹேமலம்ப சம்வத்சரம்' என்று அழைக்கப்படுகிறது
சம்வத்சரம் என்றால் ஆண்டு, வருடம் என்று அர்த்தம்.
ஹேம என்றால் தங்கம்..லம்ப என்றால் லட்சுமி. இரண்டையும் சேர்த்து சொல்லிப்பார்க்கும்போது இந்த வருடத்தின் பெயரின் அர்த்தம் விளங்கும்
எல்லாவகையிலும் 'செழிப்பான' என்று புரிந்துகொள்ளலாம்.
அகஸ்தியர் பரம்பரையில் வந்த சித்தர்களால் இந்த வருடம் 'ஹேவிளம்பி' வருடம் என்றும் அழைக்கப்படுகிறது.
மொத்தம் 60 வருடங்கள். அதில் இந்த ஹேமலம்ப வருடம் 31 வது வருடமாக வருகிறது.
31 முதல் 35 வரை உள்ள 5 வருடங்களும்
ப்ரஹ்மாவின் புத்திரர்களான பிரஜாபதி என்ற ரிஷிகளால் ஆளப்படுகிறது.
நமது முன்னோர்களாக கருதப்படும் இவர்கள்,
இந்த நாட்டையும், மனித குலத்தையும், மற்றைய அனைத்து ஜீவராசிகளையும் காக்கும் நமது முன்னோர்களாக சொல்லப்பட்டிருக்கிறது.
விசாக நக்ஷத்ரமும்  அனுராதா என்று சொல்லப்படுகிற அனுஷ நக்ஷத்ரமும் கூடிய நன்னாளில் இந்த வருடம் ஆரம்பிக்கிறது
விசாக நக்ஷத்ரத்தின் க்ரஹம் குரு
அனுஷ நக்ஷத்ரத்தின் க்ரஹம் சனீஸ்வரர்.
குருவும் சனியும் சேர்ந்தால் அது மஹா பாக்ய யோகம் என்று அழைக்கப்படுகிறது. நாளை கிழமையும் வெள்ளிக்கிழமை  
ஆகையால் இந்த மாதிரி குரு சனி வெள்ளி (சுக்ரன் ) சேர்க்கையில் பிறக்கும் இந்த ஆண்டு நமக்கும், மற்ற எல்லா ஜீவராசிகளுக்கும் எல்லாவகையிலும் சிறந்ததாக இருக்க இறைவனை பிரார்த்திப்போம்.
'லோகா ஸமஸ்தா ஸுகினோ பவந்து'

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.