அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் நடித்த படம் ‘தெறி’. கடந்த வருடம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியான இந்தப் படம், இன்றோடு ஒரு வருடத்தைத் தொடுகிறது. எனவே, அதைக் கொண்டாடத் தயாராகிவிட்டனர் விஜய் ரசிகர்கள்.
நாளை, சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி உள்ளிட்ட சில தியேட்டர்கள், ‘தெறி’ படத்தை ரசிகர்களுக்காக மீண்டும் திரையிடுகின்றன. இதில் குறிப்பிடத்தக்க விஷயம், ரோகிணி தியேட்டரில் ஒரு காட்சி மட்டுமே திரையிட முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று 3 காட்சிகள் திரையிடப் போகிறார்களாம்.
இத்தனைக்கும் தனுஷின் ‘பவர் பாண்டி’, ஆர்யாவின் ‘கடம்பன்’, ராகவா லாரன்ஸின் ‘சிவலிங்கா’ என மூன்று படங்கள் நாளை ரிலீஸாவது குறிப்பிடத்தக்கது.