சற்றுமுன்

இரண்டு வாரம் கேப் விட்ட த்ரிஷா



தொடர்ச்சியான படப்பிடிப்புகளால் சோர்வடைந்துள்ள த்ரிஷா, ரெஸ்ட் எடுப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ளார். ‘மோகினி’, ‘கர்ஜனை’ என ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும், அரவிந்த் சாமி ஜோடியாக ‘சதுரங்க வேட்டை’ இரண்டாம் பாகத்திலும் நடித்துள்ளார் த்ரிஷா. இடைவெளி விடாமல் தொடர்ச்சியாக நடித்ததால், ரொம்பவே சோர்வடைந்து விட்டார் த்ரிஷா. அதுவும், ‘கர்ஜனை’ படத்துக்காக டூப் போடாமல் சண்டை போட்டதில், த்ரிஷாவுக்கு பிரேக் தேவைப்படுகிறது. எனவே, இரண்டு வாரம் கேப் எடுத்துக் கொண்டு நியூயார்க் சென்றுள்ள த்ரிஷா, அங்கிருந்து மியாமி, ப்ளோரிடா ஆகிய மாகாணங்களுக்கும் செல்கிறார். வழக்கமாக நண்பர்களுடன் தான் டூர் போவார் த்ரிஷா. ஆனால், இந்த முறை வித்தியாசமாக அம்மாவுடன் கிளம்பிப் போயிருக்கிறார்.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.