கடந்த 2013ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் ஹாலிவுட் படமொன்றை இயக்கப் போவதாக அறிவித்தார் பி.வாசு. ஹாலிவுட் நடிகர் நிக் நோல்ட்டி, பாலிவுட் நடிகை சோனம் கபூர் ஆகியோர் அந்தப் படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால், ஏனோ சில காரணங்களால் அந்தப் படம் கைவிடப்பட்டது.
இந்நிலையில், அந்தப் படத்தை மீண்டும் தூசி தட்டி எடுக்கப் போகிறாராம் பி.வாசு. மிகப்பெரிய ஸ்டார் காஸ்டிங் இருப்பதால், பட்ஜெட்டும் பெரிசாக இருக்கிறதாம். எனவே, அதற்கேற்ற தயாரிப்பாளரை தேடிக் கொண்டிருக்கிறார். தற்போதுவரை இரண்டு தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கிறார்களாம்.