அட்லீ இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார் விஜய். மூன்று வேடங்களில் நடிக்கும் விஜய்க்கு, நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் என மூன்று ஜோடிகள். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், ஜூன் மாதம் 22ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஆகஸ்ட் மாதம் இசை வெளியீட்டு விழாவும், அக்டோபர் மாதம் படம் ரிலீஸாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அப்படியானால், இந்த வருட தீபாவளி விருந்தாக திரைக்கு வருகிறது ‘விஜய் 61’. ஏற்கெனவே, ‘சந்திரலேகா’, ‘பிரியமானவளே’, ‘ஷாஜகான்’, ‘பகவதி’, ‘திருமலை’, ‘சிவகாசி’, ‘அழகிய தமிழ் மகன்’, ‘வேட்டைக்காரன்’, ‘துப்பாக்கி’, ‘கத்தி’ ஆகிய 10 படங்கள் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகியுள்ளன. அந்த வரிசையில் பதினோராவதாக இடம்பிடித்துள்ளது ‘விஜய் 61’.