விஜய்யின் தம்பி (சித்தி மகன்) என்ற அடைமொழியோடு வந்ததாலோ, என்னவோ… விக்ராந்துக்கு இன்னும் நல்ல காலம் அமையவில்லை. கிரிக்கெட்டரான விக்ராந்த், சி.சி.எல். விளையாடும்போது விஷாலுக்கு நண்பனாக ஆனார். இதனால், தான் நடித்த ‘பாண்டிய நாடு’ படத்தில் முக்கியமான வேடம் கொடுத்து, விக்ராந்த் வாழ்க்கையில் வெளிச்சம் பரவச் செய்தார் விஷால். அத்துடன், அவரை ஹீரோவாக வைத்து ஒரு படம் தயாரிப்பதாகவும் தெரிவித்தார்.
விளம்பரப் பிரியரான விஷாலுக்கு, இதையெல்லாம் சொல்லியா தரவேண்டும்? தேர்தலில் அறிவித்த வாக்குறுதி போல, அதை அப்படியே மறந்துவிட்டார் விஷால். நல்லவேளை, கே.வி.ஆனந்த் இயக்கியுள்ள ‘கவண்’ படத்தில் விக்ராந்துக்கு நல்ல வேடம். சில நிமிடங்களே வந்தாலும், மக்கள் மனதில் பதியும் அளவிற்கு சிறப்பான வேடம். தற்போது சமுத்திரக்கனி இயக்கியுள்ள ‘தொண்டன்’ படத்திலும் சிறப்பான கதாபாத்திரத்தில் கலக்கியிருக்கிறாராம் விக்ராந்த்.