சிவா இயக்கத்தில் அஜித், விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் நடித்துள்ள படம் ‘விவேகம்’. அதன் டீஸர் இன்று காலை 12.01 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், பலவிதமான ஹேஷ் டேக்குகளைப் பயன்படுத்தி ட்ரெண்டிங் செய்து வந்தனர் அஜித் ரசிகர்கள்.
போதாக்குறைக்கு, நேற்றில் இருந்தே சத்யஜோதி ஃபிலிம்ஸின் யூ-டியூபில் லைவ் கவுண்ட் டவுன் ஆரம்பித்திருந்தார்கள். இதற்கு முன் யாரும் இப்படிச் செய்ததில்லை. இந்நிலையில், நேற்று இரவு 11.30 மணி அளவில், பெரும்பாலானோரின் வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக்கில், டவுன்லோடு செய்யப்பட்ட ‘விவேகம்’ டீஸர் பரவியது. இதனால், படக்குழுவினர் மற்றும் அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனாலும், ‘அதை நாங்கள் பார்க்க மாட்டோம், யூ-டியூபில் வெளியாவதைத்தான் பார்ப்போம்’ என அஜித் ரசிகர்கள் காத்திருந்தனர்.
அதன்படி, யூ-டியூபில் வெளியான பிறகே டீஸரைப் பார்த்து ரசித்தனர். முன்கூட்டியே ரிலீஸானது எப்படி என படக்குழுவினர் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர்.
Summary :Ajith fans who backed Facebook and supported YouTube