சற்றுமுன்

ஒரே நடிகையை பிரபலப்படுத்தும் மூன்று  நடிகர்கள்

ஆர்யா, விஷால், விஷ்ணு விஷால் ஆகிய மூன்று நடிகர்களும் நெருக்கமான நண்பர்கள் என்று ஊருக்கே தெரியும். இவர்கள் மூவரும், ஒரே நடிகையை அடுத்தடுத்து தங்கள் படங்களில் ஜோடியாக நடிக்க வைத்துள்ளனர். ‘மெட்ராஸ்’ படத்தின் மூலம் அறிமுகமான கேத்தரின் தெரேசா தான் அவர். ‘கதகளி’ படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்த கேத்தரின், ஆர்யாவுக்கு ஜோடியாக ‘கடம்பன்’ படத்தில் நடித்தார். தற்போது விஷ்ணு விஷால் ஜோடியாக ‘கதாநாயகன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படி நண்பர்கள் மூவரும் ஒரே நடிகையை அடுத்தடுத்து தங்கள் படங்களில் நடிக்க வைத்திருப்பது, கோடம்பாக்கத்தில் கிசுகிசுப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனாலும் அடங்குவார்களா அவர்கள்? இந்தக் கூட்டணியில் உள்ள மற்றொரு நண்பரான ஜெயம் ரவியின் ‘வனமகன்’ படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார் சாயீஷா. அவர் இப்போது விஷால் – கார்த்தியின் ‘கறுப்பு ராஜா வெள்ளை ராஜா’ படத்திலும் ஹீரோயின். அடுத்தடுத்து ஆர்யா, விஷ்ணு விஷால் படங்களில் நடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

summry:Arya, Vishal and Vishnu Vishal know that the three actors are close friends. All three have been acting opposite the same actress in their films. Catherine Theresa, who debuted with 'Madras' Catherine, opposite Vishal in 'Kathakali', starred opposite Arya in 'Kadambhan'. Currently Vishnu Vishal is playing the role of 'heroine'.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.