சற்றுமுன்

‘வர்லாம் வர்லாம் வா…’பைரவா’தெலுங்கில் வெளியாகிறது .


விஜய், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பரதன் இயக்கிய படம் ‘பைரவா’. கடந்த ஜனவரி மாதம் 12ஆம் தேதி வெளியான இந்தப் படம், 114 கோடி வசூலித்துள்ளது. சூர்யா, கார்த்தி, விஷால், விஜய் ஆண்டனி போலவே, விஜய்க்கும் தெலுங்கில் ரசிகர்கள் உண்டு. மலையாளம் அளவுக்கு இல்லாவிட்டாலும், தெலுங்கிலும் குறிப்பிடத்தக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். எனவே, படத்தைத் தெலுங்கில் டப் செய்து வெளியிடுகின்றனர். கண்டசாலா ரத்னகுமார் வசனம் எழுத, வென்னெல கண்ட்டி பாடல்களை எழுதியுள்ளார். படத்தின் முதல் காப்பி தயாராகிவிட்டது. அநேகமாக, இந்த மாத இறுதியில் படம் ரிலீஸாகலாம் எனத் தெரிகிறது. அப்புறமென்ன… ‘வர்லாம் வர்லாம் வா…’ என தெலுங்கு ரசிகர்களையும் தெறிக்கவிடப் போகிறார் விஜய்.

Summary:Bairava released in telugu film industry very soon-vijay-keerthi suresh-director bharatan

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.