சற்றுமுன்

'ஹிப் ஹாப் தமிழா’ ஆதி இசையமைப்பாளராக இவர்தான் காரணமாம்…


கோவையைச் சேர்ந்த ஆதி, ‘ஹிப் ஹாப் தமிழா’ உள்ளிட்ட சில ஆல்பங்களுக்கு இசை அமைத்திருந்தார். அதைக்கேட்டு பலரும் பாராட்ட, ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரியும், ஜி.வி.பிரகாஷின் தாயுமான ஏ.ஆர்.ரெஹானா, ‘நிச்சயம் நீங்கள் ஒரு இசையமைப்பாளராக வலம் வருவீர்கள்’ என்று சொன்னாராம். அதுவரை அந்த ஐடியாவே ஆதிக்கு இல்லையாம். ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆல்பத்தைக் கேட்ட விஷால் ‘ஆம்பள’ படத்தில் இசையமைப்பாளராக்க, ‘இன்று நேற்று நாளை’, ‘தனி ஒருவன்’, ‘அரண்மனை-2’, ‘கவண்’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். அத்துடன், ‘மீசைய முறுக்கு’ என்ற படத்தை இயக்கி, நடித்துள்ளார். “ரெஹானா அக்கா சொன்னது போலவே நான் இசையமைப்பாளராகி விட்டேன். இசையமைப்பாளராக ஆனதால் தான் படம் இயக்கும், ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எனவே, அவர்களை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன்” என்கிறார் ஆதி.
Summary:A.R.Rehana is the  person who is motivate and reason for "HIPHOP TAMIZHA "ADHI to become a musicians - she is sister of A.R .Rahman and Mother of G.V.Prakash .

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.