மலையாளத்தில் முன்னணி நடிகர்களுள் ஒருவரான நிவின் பாலி, ‘நேரம்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். அதன்பிறகு, அவர் நடித்த மலையாளப் படங்களைப் பார்க்கத் தொடங்கிவிட்டனர் தமிழ் ரசிகர்கள். அதுவும் குறிப்பாக, ‘பிரேமம்’ படத்தைப் பார்க்காதவர்கள் இருக்க முடியாது. சென்னையிலேயே 225 நாட்கள் ஓடியது அந்தப் படம்.
சமீபத்தில் வெளியான ‘சஹாவு’ படத்துக்கு கூட தமிழ் ரசிகர்களிடையே நல்ல ரெஸ்பான்ஸ். இதனால், அவரை நேரடி தமிழ்ப் படத்தில் நடிக்கவைக்க பலரும் போட்டி போடுகின்றனர். அதில் வெற்றிகண்ட கெளதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ள படம் ‘ரிச்சி’. தூத்துக்குடி தாதாவாக நிவின் பாலி நடித்திருக்கும் இந்தப் படத்தை, குறுகிய காலத்திலேயே 7 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர். இதனால், கோலிவுட்டில் அவருக்கான மவுசு இன்னும் அதிகரித்திருக்கிறது.
Summary:Nivin Bali, one of the leading actors in Malayalam, made her debut with Tamil fans through the film 'Time'. Subsequently, Tamil fans started to see Malayalam films starring. In particular, there can be no people who do not see the 'Prame' film. The film ran for 225 days in Chennai.