இந்தியா முழுவதும் 6000 திரையரங்குகளில் கடந்த வாரம் ரிலீஸானது ‘பாகுபலி-2’. ஒரு வாரத்துக்கு மேல் திரையரங்கில் படத்தை ஓட்ட மாட்டார்கள் என்பதால், அதற்கு முந்தைய வாரத்தில் ஒரு தமிழ்ப் படம் கூட ரிலீஸ் ஆகவில்லை. ஆனால், வருகிற வாரத்தில் ‘தொண்டன்’, ‘கொளஞ்சி’, ‘எய்தவன்’, ‘ஆரம்பமே அட்டகாசம்’ ஆகிய படங்கள் ரிலீஸாவதாக இருந்தன. ‘பாகுபலி-2’ ரிலீஸாகி 5 நாட்கள் ஆகியும், திரையரங்குக்கு வரும் கூட்டம் குறைந்தபாடில்லை. எல்லா காட்சிகளுமே ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக் கொண்டிருக்கின்றன. எனவே, இந்த வாரம் வெளியாகும் படங்களை வாங்க விநியோகஸ்தர்கள் யாரும் தயாராக இல்லை. இதனால், தியேட்டர் கிடைக்காமல், இந்த வாரம் ரிலீஸாக வேண்டிய படங்கள் தள்ளிப் போகின்றன.
Summary:Last week's release of 6000 theaters across India, 'Pakubali-2'. Since the movie does not run for more than a week, a Tamil film will not be released in the previous week. None of the distributors are willing to buy the films this week. Thus, the films that are relegated to this week will be postponed without the theater.