சற்றுமுன்

இந்த மாத இறுதிக்குள் சூர்யா படம் ஷூட்டிங் முடிந்துவிடும்


‘சிங்கம்-3’ படத்துக்குப் பிறகு சூர்யா நடித்துவரும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. விக்னேஷ் சிவன் இயக்கும் இந்தப் படத்தில், கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கிறார். படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிய நிலையிலும், இன்னும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடாமல் பில்டப் காட்டுகிறார்கள். தற்போதைய தகவல்படி, இன்னும் 10 நாட்களே ஷூட்டிங் பாக்கியிருக்கிறதாம்.

எனவே, பூசணிக்காய் உடைத்துவிட்டு, அதன்பிறகு ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்களாம். கோடை விடுமுறைக்காக குடும்பத்தோடு ஐரோப்பா சென்றிருக்கிறார் சூர்யா. அவர் திரும்பி வந்ததும் மீதமுள்ள காட்சிகளை எடுக்கிறார்கள். தகவல்படி, இந்த மாத இறுதிக்குள் மொத்த ஷூட்டிங்கும் முடிந்துவிடுமாம்.

Summary :
Surya's film in the final schedule. Suriya is playing the film after the film 'Singam-3'. In this film directed by Vignesh Sivan, Kirti Suresh plays the heroine. The filming is in close proximity and they still show the release of the first look. According to the current information, it is still 10 days shooting.



aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.